தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கத்தின் 39 ஆவது அமைப்பு தினத்தை ஒட்டி கருத்தரங்கம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது. முதல் நிகழ்வாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலர் சங்க கட்டிடத்தில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாவட்ட ஊடக வளர்ச்சி முகாமை திட்ட இயக்குனர் வானதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.

தொடர்ந்து ஊடக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் அமைப்பு தின கருத்தரங்கம் மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையிலும் மாநில துணைத்தலைவர் சோமசுந்தரம் முன்னிலையிலும் நடைபெற்றது. அமைப்பாய்த் திரள்வோம் என்ற தலைப்பில் தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலர் மாதவராஜ் ஊழியர் அமைப்புகளை நிர்வாகிகள் வீரபாகு ஜம்ரூத் நிஷா ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் நிறைவுறையாற்றினார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலர் பாலாஜி மாநில செயற்குழு உறுப்பினர் சிவமணி மாவட்ட செயலர் அன்பழகன் பொருளாளர் அமுதரசன் மாவட்ட துணை தலைவர்கள் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.