• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் பெரியாரின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குருதிக்கொடை முகாம்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகர் திராவிடர் கழகம் சார்பாக தந்தை பெரியாரின் 144 வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 21 வது ஆண்டு குருதிக்கொடை முகாம் நடைபெற்றது. ஆண்டிபட்டி தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம், நோபிள் டோனர்ஸ் கிளப் மற்றும் மதுரை இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு  ஆண்டிபட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் தலைமை தாங்கி வாழ்த்தி பேசினார். திராவிடர் கழக மாவட்ட துணைத்தலைவர் ஸ்டார். நாகராஜன் 65 வது முறையாக ரத்தக் கொடை வழங்கி துவக்கி வைத்தார். மாவட்ட தலைவர் ரகு நாகநாதன், மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வைத்தனர். அமைப்பாளர் கண்ணன் வரவேற்று பேசினார். மாநில தொழிற்சங்கம் சேகர், ஆண்டிபட்டி பேரூராட்சி தலைவர் சந்திரகலா, முன்னாள் பேரூராட்சி தலைவர் ராமசாமி, ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், தலைமை கழக பேச்சாளர் பெரியார் செல்வன்,  பூஞ்சோலை சரவணன் மற்றும் நிர்வாகிகள் சுருளி, அன்னக்கொடி, ஜோதி, ஆண்டிச்சாமி, சமூக ஆர்வலர் மீனாட்சிசுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் பேபி சாந்தா தேவி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள். 21 ஆண்டாக தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கு இந்த குருதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் ஜீவா நன்றி கூறினார். கடந்த ஆண்டு வரை அரசு மருத்துவமனைக்கு 3334 யூனிட் குருதியும், நடப்பாண்டு 150 யூனிட்க்கு மேல் குருதியும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.