• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பெருங்குடி சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் இரத்ததான முகாம்..!

ByKalamegam Viswanathan

Oct 14, 2023

திருப்பரங்குன்றம் பெருங்குடியில் உள்ள சரஸ்வதி நாராயணன் கல்லூரி யில் இரத்த தான முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா பெருங்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் நாட்டு நல பணிகள் திட்டம் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடைபெற்றது. இம்முகாமினை திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவ அலுவலர் னுச.தனசேகரன் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அழகு மலை ஏற்பாடுகள் செய்து..இருந்தார். இதில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் மற்றும் பேராசிரியர்கள் விஜயகுமார் இருளப்பன் ராமகிருஷ்ணன் மற்றும் நாட்டு நல திட்ட பணிகள் குழு மாணவர்கள் கலந்து கொண்டு 47 பேர் ரத்த தானம் செய்தனர்.