உலக ரத்தக் கொடையாளர்கள் தினத்தை முன்னிட்டு தன்னார்வ ரத்தக் கொடையின் விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் இதர பணியாளர்களை கொண்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியை கல்லூரியின் முதல்வர் லோகநாயகி துவங்கி வைத்தார். இந்த நிகழ்வில் கல்லூரியின் மருத்துவமனை கண்காணிப்பாளர், மருத்துவமனை செவிலியர் மற்றும் ரத்த வங்கி நோய்க்குரியியல் துறையில் பணியாற்றும் மருத்துவர்கள் என்று 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு இந்தப் பேரணியை மருத்துவக் கல்லூரியின் இயல் கூட்டத்தில் தொடங்கி திருச்சி மெயின் ரோடு வழியாக சென்று பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.