விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆவரம்பட்டி பகுதியில் குப்பை கிடங்கில் தீ நள்ளிரவு பிடிந்துள்ளது இந்த தீயினால் கரும்புகை சூழ்ந்து அருகில் இருந்த குடியிருப்பு வாசிகள் சுவாசிக்க முடியாத அளவிற்கு புகை சூழ்ந்துள்ளது.

உடனடியாக இராஜபாளையம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து தீயணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக அப்பகுதி முழுவதும் கரும் புகை சூழ்ந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டனர்