விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சத்திரப்பட்டி சாலையில் அமைந்துள்ள லட்சுமி மஹாலில் பாரதிய ஜனதா கட்சியின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மற்றும் சட்டமன்ற தொகுதி மாநாடு மற்றும் பி எல் ஏ டு (BLA 2 )பயிலரங்கம் நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் சரவணா துரை என்ற ராஜா வரையறுபுறையாற்றி அறிமுக உரை ஆற்றினார். அதைத் தொடர்ந்து மாநில துணைத்தலைவரும் முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி தலைமை வகித்தார் நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் சகாதேவன் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் ஆர் வெற்றிவேல் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட தலைவர் ஞானபண்டிதன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட பாரதிய ஜனதா கட்சியின் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.


மாநில செயற்குழு உறுப்பினர் சகாதேவன் பயிலரங்கில் சிறப்புரையாற்றும் பொழுது நமது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் திட்டங்களும் மற்றும் உலக அளவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் மரியாதை உயர்ந்துள்ளது. அவரின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது என்பதை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. மேலும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். தற்போதைய தமிழக அரசின் அவல நிலங்களை பொதுமக்கள் மத்தியில் எடுத்துரைத்து வாக்கு சேகரிக்க வேண்டும் என சிறப்புரையாற்றினார். வாக்காளர் பட்டியல் எந்த ஒரு வாக்காளர் பெயரும் விடுபடாமல் இருப்பதற்கு கவனமாக நாம் செயல்பட்டு இருக்கின்றோம். அதேபோல் தேர்தலிலும் செயல்பட வேண்டுமென சிறப்புரையாற்றினார். முடிவில் மண்டலத் தலைவர் ராதா நன்றி உரையாற்றினார்.




