ஜம்மு, காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு பெரம்பலூர் மாவட்ட பாஜக சார்பில் புஷ்பாஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் நகரில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உட்பட பொதுமக்கள் 25க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே மத்திய அரசு இதற்கான தக்க நடவடிக்கை எடுப்பதாக உயர்மட்ட குழுவினருடன் ஆலோசனை நடத்திவரும் நிலையில் பெரம்பலூர் மாவட்ட பாஜக தலைவர் முத்தமிழ் செல்வன் தலைமையில் பயங்கரவாத தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் முன்பாக கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைத்து விளக்கு ஏற்றி மற்றும் மலர்கள் தூவி 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து இந்த நிகழ்வுக்கு தக்க பதிலடி கொடுக்கவேண்டுமென கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்வில் பாரத ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.