பாரதிய ஜனதா கட்சி மாநில இளைஞரணி செயலாளர் ஆதித்யா சேதுபதி வெம்பக்கோட்டை பகுதியில் வருகை தந்தார். அப்போது வெம்பக்கோட்டையில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சி வெம்பக்கோட்டை ஒன்றிய தலைவர் மாரிச்செல்வம், ஒன்றிய இளைஞரணி தலைவர் சதீஷ்குமார், உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.






