• Sat. Mar 28th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

பஹல்காம் தாக்குதலில் பாஜக சார்பில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

ByAnandakumar

Apr 24, 2025

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு கரூர் மாவட்ட பாஜக சார்பில் மலர் தூவி மரியாதை தொடர்ந்து மௌன அஞ்சலி அஞ்சலி செலுத்தினர்.

ஜம்மு காஷ்மீரின் சுற்றுலாத் தலமான பஹல்காம் என்ற இடத்தில் நிகழ்ந்த பயங்கரவாதிகள் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தத் தாக்குதலுக்கு லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பான ரெசிஸ்டன்ஸ் பிரண்ட் பொறுப்பேற்றுள்ளது.

இதனிடையே பயங்கரவாதிகளின் தாக்குதல்களுக்கு பல்வேறு கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அரசும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதலில் உயரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட பாஜக சார்பில் கரூர் திண்டுக்கல் சாலையில் உள்ள பாஜக கட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது.

கரூர் மாவட்ட பாஜக தலைவர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, உயிரிழந்தவர்களின் புகைப்படத்திற்கு மலர் துவியும் வீர வணக்கம் செலுத்தி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.