காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை மூலம் ஆண்டுதோறும் காரைக்கால் கார்னிவல் விழா நடத்தப்பட்டு வருகிறது இவ்விழாவை இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை என்று நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதால் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவை கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் எனவே பொங்கல் விழா முடிந்த பின்னர் காரைக்கால் கார்னிவல் விழாவை நடத்த கோரியும் கார்னிவல் விழா என்ற வார்த்தை தவறான தமிழாக்கத்தை தருவதால் கார்னிவல் என்ற பெயரை மாற்ற வேண்டும் எனவும் காரைக்கால் மாவட்ட பாஜக சார்பில் மாவட்ட ஆட்சியர் சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர் ஜி.என்.எஸ்.ராஜசேகரன் தலைமையில் மாவட்ட தலைவர் முருகதாஸ் மாநில செய்தி தொடர்பாளர் அருள் முருகன் உள்ளிட்டோர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்துள்ளனர்




