• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

திற்பரப்பு அருவிவாகன நுழைவு கட்டணம் பாஜக உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்..,

கன்னியாகுமரி மாவட்டம் பிரபல சுற்றுலா தலமான திற்பரப்பு அருவி வாகன நிறுத்துமிடம் நுழைவு வாயிலில் கட்டணம் கடந்த முறை வாட்சன் என்பவர் ஒப்பந்தம் அடிப்படையில் 83 லட்சம் ரூபாய் க்கு ஒப்பந்தம் எடுத்து இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 2 தேதி அவர் தனக்கு இதில் நஷ்டம் ஏற்படுவதாக கூறி பேருராட்சியில் தான் வாகன நிறுத்துமிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தில் இருந்து நிறுத்தி கொள்வதாக கடிதம் கொடுத்தார். இந்த நிலையில் பேருராட்சி நிர்வாகம் இந்த மாதம் 4 தேதி உள்ளூர் விடுமுறை அன்று ஏலம் அறிவித்தார்கள்.

அன்று யாரும் ஏலத்தில் கலந்து கொள்ளவில்லை இதனால் யாருக்கும் தெரியாமல் மறுதினம் இரண்டு ஒப்பந்ததாரர் மட்டுமே வைத்து ரகசியமாக பேருராட்சி நிர்வாகம் ஏலம் நடத்தி 37 லட்சம் ரூபாய் க்கு ஒரு ஒப்பந்ததாரர் க்கு வாகன நிறுத்துமிடம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமையை வழங்கி உள்ளது.

இதனால் பேருராட்சிக்கு 23 லட்சம் ரூபாய் இழப்பீடு ஏற்பட்டு உள்ளது ஆகவே பேருராட்சிக்கு ஏற்பட்டுள்ள இழப்புகளை சரிசெய்ய மீண்டும் ஏலம் நடத்தக்கோரியும் ஏலம் நடத்தும் வரை பேருராட்சியே நேரடியாக வாகன நுழைவு கட்டணம் வசூலிக்க உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி பாஜக கவுன்சிலர்கள் திற்பரப்பு பேருராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களிடம் பேருராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர் இதன் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .