• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சாவு வீட்டிலும் அரசியல் பண்ணக்கூடிய கட்சிதான் பாஜக செல்லகுமார் எம்.பி.பேட்டி….

பாஜக கட்சியினரிடமிருந்து உண்மையே வெளியில் வராது சாவு வீட்டிலும் அரசியல் பண்ணக்கூடிய கட்சிதான் பாஜக என கடுமையாக விமர்சித்தார்….
சேலத்தில் காங்கிரஸ் பிரமுகரின் சகோதரர் மறைந்ததையொட்டி இரங்கல் நிகழ்விற்கு ஆறுதல் தெரிவிக்க வருகை தந்த கிருஷ்ணகிரி பாராளுமன்ற உறுப்பினர் செல்வகுமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் கூறுகையில்… வருகை தந்தகடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கிருஷ்ணகிரி பாராளுமன்ற தொகுதியில் ராணுவ வீரரின் படுகொலை சம்பவம் நடந்தது. அந்த வீரரின் உறவினர்களுக்கிடையே இருந்த பகையின் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. வன்முறை எந்த உருவத்தில் வந்தாலும் நிச்சயமாக அது கண்டிக்கத்தக்கது நியாயப்படுத்த முடியாதது. இது சாதி ரீதியாக வந்தாலும் மதரீதியாக வந்தாலும் மொழி ரீதியாக வந்தாலும் கண்டிக்கக் வேண்டும்.ஆனால் பாரதிய ஜனதா கட்சியினர் இந்தியாவில் எங்குமே நடக்காதது போல் தேசிய அளவில் ஒரு பிரச்சினையாக, செய்தியாக கொண்டு வருகின்றனர் இந்தியாவில் எல்லைப் பகுதியில் ராணுவ வீரர்கள் தினசரி படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் ஆனால் எந்த செய்தியும் வெளிவருவதில்லை கடந்த 9 ஆண்டுகளில் நூற்றுக்கணக்கான ராணுவ வீரர்கள் பலி கொடுக்கப்பட்டு இருக்கிறார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த ஒன்பது ஆண்டுகளில் தான் ராணுவ வீரர்களின் படுகொலைகள் அதிக அளவில் நிகழ்ந்துள்ளது ஆனால் அதைப்பற்றி பாஜகவினர் வாய் திறக்க மாட்டார்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசவே மாட்டார் எனவும் கர்நாடகா மாநிலத்திலும், மத்தியிலும் பிஜேபி ஆட்சி ஆனால் சேலம் மாவட்டம் கொளத்தூர் கோவிந்தபாடி அடுத்த தமிழக கர்நாடக எல்லையில் உள்ள வனப்பகுதியில் மீனவர் ராஜா சுட்டு படுகொலை செய்யப்பட்டதற்கு வாய் திறக்கவே மாட்டார்கள் என குற்றம் சாட்டினார் இதுதான் பாரதிய ஜனதா கட்சியினுடைய இரட்டை வேடம் இது உலக மக்கள் அனைவருக்கும் தெரியும் தமிழக அரசு கர்நாடக அரசிடம் பேசி நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவதாக கூறினார்.


மேலும் மதம் என்ற ஒரு ஆயுதத்தை கைவிட்டால் பாரதிய ஜனதா கட்சி என்ற இயக்கமே இருக்காது எனவும் கூறினார்.
மேலும் ஈரோடு சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்காளர்களை அடைத்து வைத்ததாக எழும் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதில் அளித்தவர் தமிழ்நாடு அரசியலில் பல தேர்தல்களை சந்தித்து இருக்கிறோம். ஆர் கே நகரில் தினகரன், அதிமுக போட்டி போட்டு வாக்காளர்களை அடைத்து வைக்கக்கூடிய செயல்பாடுகளை துவக்கி வைத்தனர் ஆதலால் அவர்களுடைய பார்வைக்கு மற்றவர்களும் அடைத்து வைப்பார்கள் என்று அவர்களுக்கு தோன்றுகிறது அதுபோன்று எந்த ஒரு அடக்குமுறையும் அங்கு இல்லை சுதந்திரமாக மக்கள் நடமாடிக் கொண்டு இருக்கிறார்கள். எனவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்திற்கு செல்லும்போது ஊர் மக்கள் யாரும் வரவேற்பு கொடுக்காததால் வெளி மாவட்டங்களில் இருந்து ஆட்களை வரவழைத்து வரவேற்பு கொடுத்து கொண்டிருக்கிறார்கள் அந்த ஆதங்கத்தில் பேசி வருகிறார் என்றும் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெரும் என கூறினார்.