பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதியில் செந்துறை வடக்கு ஒன்றியம் நல்ல நாயகபுரம் கிராமத்தில் தீ விபத்தில் வீடு எரிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒன்றிய பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் துணி வகைகள் மாவட்ட தலைவர் முத்தமிழ்செல்வன் தலைமையில், ஒன்றிய தலைவர் என். ஆர். ரவி முன்னிலையில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச் செயலாளர்கள் அருண் பிரசாத், ராமச்சந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் ராஜா, கலியபெருமாள், புயல் செல்வம், பழனிச்சாமி, மோகன், மணி, நீதி செல்வன், கலைமணி, இளையராஜா, செல்வராசு, மதியழகன் மற்றும் தாமரை சொந்தங்கள் கலந்து கொண்டனர்.
