இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கு பின், குமரி மாவட்டத்தில் உள்ள மக்கள் இது வரை பங்கேற்ற மக்கள் போராட்டம் பணிந்த அரசு என்பதுதான் குமரியின் கடந்த கால ஒரு வரலாற்று பதிவு.
குமரி மாவட்டத்தை, தமிழகத்துடன் இணைக்க வேண்டும் என குமரி தந்தை மார்சல் நேசமணி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தின் வெற்றி 1956_நவம்பர் 1_ம்தேதி. குமரி மாவட்டம் தாய் தமிழகத்தோடு இணைக்கப்பட்டது. குமரி மாவட்ட மக்களின் இரண்டாம் சுதந்திர போராட்டமாக குமரி மக்களால் அன்று வர்ணிக்கப்பட்டது.
கூடங்குளத்தில் ரஷ்யா அரசுடன் கூட்டு முயற்சி கூடன்குளம் அணு மின் திட்டம். குமரி, நெல்லை மாவட்ட மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பால். இடிந்த கரை புனித காணிக்கை மாதா தேவாலயம் முற்றத்தில் இரண்டு ஆண்டுகள் உறுதியோடு மக்கள் பதிவு செய்த ஒன்றிய அரசிற்கு எதிரான போராட்டம்.

இடிந்த கரை என்னும் சிறிய மீனவகிராமத்தை உலகமே திரும்பி பார்த்த மக்கள் போராட்டம். இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய, சிறிய ஊடகங்களின் ஒட்டுமொத்த குவியலின் இடமாக “இடிந்தகரை” இருந்ததை கடந்து, சுப.உதயகுமார் இந்தியா மட்டும் அல்ல உலகெங்கும் உள்ள அணு உலை எதிர்ப்பாளர்களின் அடையாள வடிவமாக பார்க்கப்பட்டார்.
கூடன்குளம் அணு உலை எதிர்ப்பாளர்களின் மேல் அன்றைய ஒன்றிய அரசு சுமத்திய தேசவிரோத குற்றவாளி என 300_க்கும் அதிகமான வழக்குகள், தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் கூடன்குளம் போராட்டம் காரர்கள் மீது அனியயாமாக போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற படும் என்ற நிலையில் பல வழக்குகள் திரும்பப் பெற்றாலும் , வழக்குகள் முழுமையாக திரும்பப் பெறவில்லை.

ஒன்றிய அரசின் இணை அமைச்சராக கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் பொன். இராதாகிருஷ்ணன் இரண்டாவது முறை சாலை, மற்றும் துறைமுக அமைச்சகத்தின் இணை அமைச்சராக இருந்த போது, குமரியில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை உள்ள 47_ மீனவ கிராமங்களில் அடர்த்தியாக வாழும் மீனவர்களை இடம் பெயர்த்து,பாஜகவிற்க்கு எதிரான மீனவர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் அடிப்படையில் மீனவர்கள் இடையே இருக்கும் ஒற்றுமையை குலைத்து அதன் மூலம் சட்டமன்ற தேர்தலில் பாஜக குளிர் காயலாம் என்ற கனவில் பொன்னார் இட்ட திட்டம் எல்லாம் நீண்ட கடலோரத்தில் “கானல்” நீரானது.
சர்வதேச பெட்டக மாற்று முனையம் என்ற திட்டத்தை செயல் படுத்த போவதாக அறிவித்தது. மீனவ மக்களின் தூக்கத்தை தொலத்தது மட்டும் அல்ல. மீனவர்களின் துறை முக எதிர்ப்பு போராட்டத்திற்கு எதிராக. பாஜக பெட்டக மாற்று முனையம் ஆதரவு போராட்டம் நடத்தியது. இதில் வேடிக்கை என்னவென்றால். இந்திய அரசின் கப்பல் துறை இந்த திட்டத்திற்கு ரூ.1_கூட அறிவிக்காத நிலையில். குமரியில் பெட்டக மாற்று முனையம் வகையில் குமரி மாவட்டத்தில் இயங்கிய நிர்வாக அலுவலகம்,அதன் பணியாளர்கள், மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் என ஒன்றிய அரசு செய்த சில கோடி பணம் முழுவதும். அன்றைய அமைச்சர் சி பொன். இராதாகிருஷ்ணன் பரிந்துரையில். தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து தான் மொத்த செலவும் செய்யப்பட்டது. வராத துறைமுகத்தை சொல்லியே குமரியில் பாஜக செல்வாக்கை இழந்தது. இதை போன்று மக்களின் எதிர்ப்பின் வேகத்தை எதிர் கொள்ள முடியாத ஒன்றிய அரசு துறை முகத்தின் திட்டத்தை ஐந்து இடங்களுக்கு(பூனை அதன் குட்டிகளை இடம் மாற்றுவது)போன்று மாற்றியதே அன்றி வர்த்தக துறைமுகத்தின் திட்டத்தை தொடராதது. கடற்கரை மக்களின் ஒன்றிய பாஜக அரசிற்கு எதிரான போராட்டம் மகாத்தான வெற்றியை அடைந்தது.

குமரி மாவட்டத்தில் நில இயல், மக்களின் வாழ்வியல் என்ற நிலையில். குமரி மக்களின் களப் போராட்டங்கள் வெற்றி பெற்றது. சூடு பட்ட பூனை போன்ற நிலையிலும் அவர்களை திருத்திக்கொள்ளத நிலையே மீண்டும் தொடர்வது போன்று.
குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் மத்திய அரசின் அரும்மணலாலை 1965 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் குமரி மாவட்ட கடற்கரை மணலில் இருந்து, அரிய வகை கனிமங்களை பிரித்தெடுத்து வருகிறது. அந்த வகையில் மோனசைட், இல்மைனட், ரூட்டைல், சிர்கான், கார்னெட் ஆகியவற்றை பிரித்தெடுக்கிறது.
அரிய வகை கனிமங்கள் ,கம்ப்யூட்டர், செல்போன் மற்றும் பல்வேறு மின்னணு சாதனங்கள், விமானத்தில் பாகங்கள், மருத்துவ சிகிச்சை உதிரிப்பாகங்கள், பெயிண்ட், செராமிக்ஸ், டைல்ஸ், காகிதம், வாகன உதிரி பாகங்கள் மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த துறைகளின் மூலப்பொருட்களாக பயன் பட்டு வருகிறது..

குமரி மாவட்டத்தில் கடற்கரையை ஒட்டிய குறும்பனை முதல் நீரோடி, கிள்ளியூர், உட்பட 5 கிராமங்களில் கனிமங்கள் எடுக்க 1,44,0618 எக்டேர் அளவு நிலப்பரப்பில் கனிமங்களை பிரித்தெடுப்பதற்கான அனுமதியை ஒன்றிய பாஜக அரசு, மணவாளக் குறிச்சியில் உள்ள அருமணல் ஆலைக்கு வழங்கியுள்ளதாக செய்தி பரவி வரும் நிலையில், குமரி மீனவ மக்களிடம் இருந்து முதல் எதிர்ப்பு குரல் ஒலிக்க தொடங்கிய நிலையில். மீனவர்களின் உரிமை குரலுடன் கன்னியாகுமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த் அவரது குரலையும் எழுப்பி உள்ளதுடன். ஒன்றிய அரசின் குமரி மக்களின் விரோத செயலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளதில், (அக்டோபர் _1)ம் நாள் முதல் கருத்து கூட்டம் தக்கலையில் உள்ள கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடக்க இருக்கிறது. இந்த முதல் கூட்டத்தில் குமரி மக்களின் எதிர்ப்பின் நாடி துடிப்பை கருத்து கேட்கும் அதிகாரிகள் உணர்ந்து ஒன்றிய அரசிற்கு தெரிவிக்க வேண்டும் என்பதுடன். மக்களின் கேள்விகளுக்கு அரசின் அதிகாரிகள், கடந்த கால வர்த்தக துறை முக திட்டகாலத்தில் பொறுப்பற்ற முறையில் சொன்ன பதில்கள் போன்ற நிலை தொடரக்கூடாது.
குமரி மக்களின் வாழ்வாதாரம், அவர்களின் உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அற்ற நிலை ஏற்படும் என்ற மக்களின் அச்சம் நிறைந்த கேள்விகளுக்கு பொறுப்புணர்வுடன் பதில் சொல்ல வேண்டும் என விஜய் வசந்த் அவரது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குமரியை மீண்டும் கலவர பூமிமாக்க மோடி அரசு திட்டமிட்டுள்ளது என்பதின் அடையாளமே. குமரியில் 5_கிராமங்களில் 1,144,0618 எக்டேர் கனிமங்கள் எடுக்கும் திட்டம் என கண்டித்து மீன்பிடி தொழிலாளிகள் குமரி ஆட்சியர் அழகு மீனாவிடம் மனு கொடுத்துள்ளார்கள்.