• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கழுகுமலையில் பாஜக கொடியேற்று விழா.

ByM.maniraj

Sep 25, 2022

பாஜக நிறுவனர் பண்டித தீனதயாள் உபாத்யாய அவர்களின் 104 வது பிறந்த நாளை முன்னிட்டு கழுகுமலையில் கயத்தார் மேற்கு ஒன்றிய பாஜக சார்பில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கயத்தார் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் ஜெகதீஷ் தலைமை வகித்து காந்தி மைதானத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பாஜக மாவட்ட துணை தலைவர் தொழிலதிபர் இராஜேந்திரன் முன்னிலை வகித்து காளவாசல் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் பிள்ளையார் கோயில் பஸ் நிறுத்தம் அருகே உள்ள கொடிக்கம்பத்தில் சிறுபான்மை பிரிவு ஒன்றிய தலைவர் பிரான்சிஸ் கொடியேற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து நடந்த பாஜக ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் ஒன்றிய துணை தலைவர்கள் மதிஇராஜசேகரன், முத்துராமலிங்கம், ஒன்றிய பொதுசெயலாளர் சதீஷ், கூட்டுறவு பிரிவு ஒன்றிய தலைவர் மாடசாமி, துணை தலைவர் விஸ்வநாகராஜன், தமிழ் வளர்ச்சி பிரிவு பர்வீன்சிங், நெசவாளர் பிரிவு மாவட்ட செயலாளர் மாரியப்பன், நெசவாளர் பிரிவு ஒன்றிய தலைவர் முத்து, ஒன்றிய செயலாளர் தங்கையா, அமைப்பு சாரா பிரிவு ஒன்றிய துணை தலைவர் சுப்புராஜ், விவசாய அணி ஒன்றிய தலைவர் ஜெயக்குமார், அரசு தொடர்பு பிரிவு ஒன்றிய துணை தலைவர் ராஜமாணிக்கம், விவசாய அணி லட்சுமணன், கிளை தலைவர்கள் ஜெகதீஷ், ராமச்சந்திரன் மற்றும் மாரிமுத்து, கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கயத்தார் மேற்கு ஒன்றிய பாஜக தலைவர் ஜெகதீஷ் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.