• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

அவனியாபுரம் சாலையில் கழிவுகள்-சொந்த செலவில் சுத்தம் செய்து கொடுத்த பா.ஜனதா நிர்வாகி

ByKalamegam Viswanathan

Mar 17, 2023

மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்குவரத்து சாலைகளில், கழிவுகள் கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. எனவே அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் கொடுத்தனர்.

இருந்த போதிலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்த விஷயம் பா.ஜனதா நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தது. அப்போது பா.ஜனதா கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் காளிதாஸ், சொந்த செலவில் போக்குவரத்து ரோட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது என்று முடிவு செய்தார். எனவே அங்கு உடனடியாக ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் அவனியாபுரம் போக்குவரத்து சாலையில் கொட்டிக்கிடந்த கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன. மதுரை அவனியாபுரத்தில் சொந்த காசில் ஜே.சி.பி எந்திரம் வரவழைத்து, போக்குவரத்து சாலையில் சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்ட பா.ஜனதா தலைவர் காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்..