உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, பி. கே. மூக்கையா தேவர் சிலை இருக்கின்ற இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் என உசிலம்பட்டியில் பாஜக சார்பில், பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் காதலி நரசிங்க பெருமாள் பேட்டியளித்தார்.
பி.கே.மூக்கைத்தேவரின் 102 வது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் காதலி நரசிங்கபெருமாள் தலைமையிலான பாஜக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மதுரை பெருங்கோட்ட பொறுப்பாளர் காதலி நரசிங்கபெருமாள்.,
பாஜக சார்பில் மண்ணின் மைந்தர் கல்வித் தந்தை பி.கே.மூக்கையாதேவர் பிறந்தநாளில் அவருடைய நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளோம். நூற்றாண்டு விழாவில் பாஜக சார்பில், தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். பங்கெடுத்து வருகிறோம் எனவும், அனைத்து சமுதாயத்தை சேர்ந்த மக்களும் உயர் கல்வி படிப்பதற்காக கல்வி நிறுவனங்களை ஆரம்பித்து அதன் மூலம் ஆயிரக்கணக்கான மாணவர்கள் உயர்கல்வி படித்து பல்வேறு துறைகளில் அதிகாரிகளாக விளங்குவதற்கு ஒரு முக்கிய காரணமாக விளங்கிய தலைவர் பி.கே.மூக்கையா தேவர் எனவும், முத்துராமலிங்கத் தேவர் அவர்களுக்கு இணையாக விளங்கியவர். மூக்கையாதேவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்து இப்பகுதி மேம்பாட்டிற்காக பாடு பெற்று இருக்கிறார். குரல் கொடுத்திருக்கிறார் எனவும், அதேபோன்று பெரியகுளம் நாடாளுமன்ற உறுப்பினராக இராமநாதபுரம், நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராக இருந்து பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்திருக்கிறார்.
பாராளுமன்றத்தில் முத்துராமலிங்கத் தேவருக்கு திருஉருவச்சிலை அமைவதற்கு முழு முயற்சி எடுத்தவர் எனவும், இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக
இந்தக் கல்லூரியின் எதிரே சட்டக் கல்லூரி அமைவதற்கு கோரிக்கை உள்ளதாகவும், மாநில அரசாங்கம் விரைவாக கொண்டு வர வேண்டும் எனவும், டிஎன்சி என்று உள்ள சான்றுகளை டிஎன்டி 64 சமுதாய மக்கள் இருந்ததை திமுக அரசாங்கம் அதை மாற்றி நம் சமுதாய மக்களை சில சமுதாயத்தை மேம்பட்டவையாகவும் சில சமுதாயத்தை பிற்படுத்தப்பட்ட சமுதாயமாக மத்திய பட்டியலில் ஓ.பி.சி பட்டியலில் கொண்டு சென்றார்கள்.
இப்பகுதி மக்களுக்கு டிஎன்டி பட்டியலில் கொண்டு வர வேண்டும் அதன் மூலம் வேலை வாய்ப்பிலும் கல்வியிலும் பிற வசதிகளில் முன்னுரிமை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசாங்கம் மீண்டும் டிஎன்டி பட்டியலில் கொண்டு வர வேண்டும் எனவும், உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை, பி.கே. மூக்கையா தேவர் சிலை இருக்கின்ற இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் சிலை அமைக்கப்பட வேண்டும் பாஜக சார்பில், இந்த கோரிக்கையை முன் வைக்கிறோம் என பேட்டியளித்தார்.