• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு…

BySeenu

Dec 9, 2023

கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரித்துள்ள – ’பைட் கிளப்’ திரைப்பட குழுவினர் கல்லூரி மாணவர்களுடன் கலந்து உரையாடினர்.இந்நிகழ்வில் படத்தின் கதாநாயகன் விஜயகுமார், தயாரிப்பாளர் லோகேஷ் கனகராஜ், நடிகை மோனிஷா ஆகியோர் கலந்து கொண்டனர். மேடையில் விஜயகுமார் பேசத் தொடங்கிய போது, மாணவர்கள் லோகேஷ் கனகராஜ் பெயரை உச்சரித்து பேசவிடாமல் தடுத்தனர். பின்னர் மேடையில் லோகேஷ் கனகராஜ் பேசிய போது, “பைட் கிளப் படத்தை பார்த்துவிட்டு அனைவரும் தங்களுடைய கருத்துக்களை சொல்லுங்கள். அனைவருக்கும் படம் பிடிக்கும் என நம்புகிறேன்” என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விஜயகுமார் கூறியதாவது.”வருகின்ற 15″ம் தேதி பைட் கிளப் திரையரங்குகளில் வெளியாகிறது.

கல்லூரி மாணவர்கள் குறித்தும், அவர்களுடைய வாழ்க்கை முறை குறித்தும் படம் எடுத்துள்ளோம். கல்லூரி காலத்தைக் கடந்து எதிர்காலத்தை நோக்கி எப்படி செல்கிறார்கள் என்பது படத்தின் கதையாக அமைந்துள்ளது. பைட் கிளப் படம் என்னுடைய இயக்கம் கிடையாது. என்னுடைய உதவி இயக்குநரின் படம். ஒடுக்குமுறை பற்றி பெரிதாக பேசவில்லை. இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து பேசும் மிகவும் அர்த்தமுள்ள படமாக இருக்கும். ஒடுக்குமுறையை நேரடியாக சொல்லாமல் மறைமுகமான ஒரு அர்த்தமுள்ள கதையாக படம் எடுத்துள்ளோம்.
வணிக ரீதியான வெற்றியை கையாளுவது மட்டும் இல்லாமல் கதையை அனைவரும் ரசிக்கும் விதமாக படம் இருக்கும். அதற்காக தொழில்நுட்பங்களுடன் மிகச் சிறப்பாக படத்தில் வேலை செய்துள்ளோம். பெரிய படங்களில் உள்ள தொழில்நுட்ப நேர்த்தி சிறிய படங்களில் எதிர்பார்க்க முடியாது. ஆனால் இந்த படத்தில் எங்களுடைய தொழில்நுட்ப நேர்த்தியை சிறப்பாக செய்துள்ளோம்.

இதற்காக கடந்த மூன்று வருடமாக படத்தின் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்றது. படமும் மிகச் சிறப்பாகவும் வந்துள்ளது. மக்கள் மீது பெரிய நம்பிக்கை உள்ளது. சின்ன படங்கள் தரமாக இருந்தால், ரசிகர்கள் எப்போதும் ரசிப்பார்கள். ஆனால் அந்த படத்தை சந்தைப்படுத்துவது பெரிய சவாலாக உள்ளது. இந்தச் சவாலை எதிர்கொண்டு தான் இந்த படத்தை வெளிகொண்டு வருகிறோம். மக்கள் ஏற்கனவே எனக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்துள்ளதாக நம்புகிறேன். கூடுதலாக இயக்குநர் லோகேஷ் இணைந்துள்ளதால் படம் அனைத்து ரசிகர்களை விரைவில் சென்றடையும் என நம்புகிறேன்.
படம் இயக்கத்தின் மீது ஆர்வம் இருக்கிறது. ஆனால் இப்போது நடிப்பில் அதிகளவில் ஆர்வம் உள்ளது. இந்த படத்தில் வசனத்தில் பங்குபெற்றுள்ளேன். எழுத்து சார்ந்து தொடர்ச்சியாக பயணித்து தான் வருகிறேன். சின்ன சின்ன கதைகளும் எழுதி வைத்து வருகிறேன். வருங்காலத்தில் இயக்கம் குறித்து பார்க்கலாம். ஆனால் இப்போதைக்கு நடிப்பு தான். இளைஞர்களுக்கு கல்வியை தாண்டியும் விஷயம் இருக்கிறது. உடல் கட்டமைப்பு, ஆரோக்கியம் என்பது முக்கியமானது. படத்தின் தேவைக்காக உடலில் சிக்ஸ் பேக் வைத்துள்ளேன். பிடித்ததை செய்யுங்கள். படத்தின் வன்முறையை வியாபாரத்துக்காக பயன்படுத்தவில்லை. கடைசியில் ஒரு கருத்து சொல்லும் படமாக இது இருக்காது. இந்த படம் ரொம்ப துடிப்பான இளைஞர்களை பயன்படுத்தி தவறான பாதையில் செல்ல வைப்பதை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக செய்துள்ளோம்.
சண்டைக் காட்சி ஆக்சனுக்கு பார்ப்பதற்கு ரசிகர்கள் தனி கூட்டம் உள்ளது. முழு நேர ஆக்சன் படம் எடுப்பது மிகவும் சிரமம்.படத்தின் ஹீரோயின் மலையாள படத்தில் உதவி இயக்குனராக இருந்துள்ளார். ஷார்ட் பிலிம் எடுத்துள்ளார். படத்திற்கு நடிகை தேடிட்டு இருக்கும்போது இன்ஸ்டாகிராம் வாயிலாக அறிமுகமானார். படத்திலும் நன்றாக நடித்துள்ளார். நிக்ஜாம் புயல் பாதிப்பு மீட்பு பணியில் பெரிய நடிகர்கள் உதவ முன்வராது குறித்து எனக்கு தெரியவில்லை. ஆனால் நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும். எங்கள் படத்தில் பணி புரிந்தவர்களுக்கு பாகுபலி படத்தில் செல்வது போன்று மழைநீரில் நடந்து சென்று உணவுகள் கொடுத்தோம். நாங்கள் பெரிய அளவில் வசதி வாய்ப்பு அடைந்தவர்கள் கிடையாது. இயன்றதை செய்து வருகிறோம். அவர்கள் உதவி செய்யாததை பற்றி நாம் ஏதும் சொல்ல முடியாது.

மாணவர்களின் போதை கலாச்சாரம் குறித்து படத்தில் பேசி உள்ளோம். ட்ரெயிலர் வெளியே வரும் வரை வரைக்கும் பேச வேண்டாம் என பார்க்கிறேன். லோகேஷ் கனகராஜ் படத்தில் உள்ளே வரும்போது படத்தின் கருத்து, விளம்பரம் அதிகமாக பகிரப்படும் என நம்புகிறேன். சினிமாவில் உள்ள அன்பு தான் எங்கள் இரண்டு பேரையும் இணைத்துள்ளது. லோகேஷின் கனகராஜன் இலக்கு பெரிதும் பெரிது கேள். அவருடைய வேகம் நமக்கெல்லாம் வருமா எனத் தெரியாது. யோசிக்கவே பயமா இருக்கிறது. ஒரு படத்துக்கு பின் அவ்வளவு உழைப்பு முதலீடு உள்ளது. ஆனால் அதை எல்லாம் தாண்டி ஒரு பிரமிக்க வைக்கும் பாதையில் அவர் சென்று கொண்டிருக்கிறார் எனத் தெரிவித்தார். நடிகை மோனிசஷா கூறியதாவது. “விஜயகுமாரின் பெயர் பார்த்து தான் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். மலையாளத்தில் குறும்படங்கள் இயக்கி உள்ளேன். படத்தில் அனைவரும் மிகச் சிறப்பாக வேலை செய்துள்ளனர். இந்த படத்தில் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என இவ்வாறு தெரிவித்தார்.