ஆம்பூர் பிரியாணி என்றாலே அனைவருக்கும் நாவில் எச்சில் ஊறும். ஆம்பூர் பிரியாணி ரசிக்கவே நாக்கிற்கு கொடுப்பினை இருக்க வேண்டும் என்பார்கள் அசைவ பிரியர்கள். கீழ் நிலையில் ஸ்பெயின் நாட்டில் நடக்கும் தக்காளி திருவிழாவின் மாடலில், ஆம்பூர் பகுதியில் இருந்து அனைத்து பிரியாணி கடை கைகளையும் ஒன்று சேர்த்து பிரியாணி திருவிழாவைக் கொண்டாட ஏற்பாடு செய்திருக்கிறது மாவட்ட நிர்வாகம்.
அதன்படி ஆம்பூர் வர்த்தக மையத்தில் வருகிற 13-ஆம் தேதி முதல் 15ம் தேதி வரை பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திருவிழா நடைபெறுகிறது. அதனைப்போலவே 15 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அன்றைய நாளில் மட்டும் மதியம் ஒரு 1 முதல் இரவு 8 மணி வரை பிரியாணியை சாப்பிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30க்கும் மேற்பட்ட அரங்குகள்,20க்கும் அதிகமான பிரியாணி வகைகள் என பிரியாணி திருவிழா நடைபெற உள்ளது. பார்வையாளர்கள் அனைவருக்கும் அனுமதி இலவசம். நுழைவு கட்டணம் எதுவும் செலுத்த வேண்டாம். மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் குஷியும் கும்மாளமுமாக கூடி ஆளுக்கு ஒரு பிடி எடுத்து சாப்பிட ரெடியா? என்று அழைப்பு விடுத்துள்ளனர். நீங்களும் பிரியாணி சாப்பிட ரெடியா?