தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மறைந்த ஜெயலலிதா அவர்களின் 78-வது பிறந்தநாளை காரைக்காலில் அஇஅதிமுகவினர் உற்சாகமாக கொண்டாடினார்கள். புதிய பேருந்து நிலையம் அருகில் அஇஅதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர். அம்மாவின் பிறந்தநாளையொட்டி பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் காலை சிற்றுண்டி வழங்கியும் அதிமுகவினர் அம்மாவின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

இதே போல காரைக்காலில் உள்ள தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கொடியை மாவட்ட செயலாளர் ஓமலிங்கமும் அண்ணா தொழிற்சங்க கொடியை இணைச் செயலாளர் ஜீவானந்தமும் ஏற்றி வைத்தனர். அதனைத் தொடர்ந்து அம்மாவின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் தொழிற்சங்க தலைவர் தேவாதிராஜன், நாகை மண்டல பொருளாளர் நமச்சிவாயம் உள்ளிட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
காரைக்கால் வடக்கு தொகுதி சார்பில் 300க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு புடவை மற்றும் அன்னதானம் மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் வழங்கினார். தொடர்ந்து திருநள்ளாறு தொகுதியில் தொகுதி தலைவர் முருகன் ஏற்பாட்டில் அம்மாவின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் அன்னதானம் வழங்கப்பட்டது தொடர்ந்து மதியம் காரைக்கால் அம்மையார் அன்னதான கூடத்தில் அம்மாவின் பிறந்தநாளை ஒட்டி மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் ஏற்பாட்டில் சிறப்பு அன்னதானம் நடைபெற்றது. நகர அவைத் தலைவர் பாண்டியன் ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.






