• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

எஸ்.பி ஆபீஸ் அருகில் பைக் திருட்டு..,

ByT.Vasanthkumar

Apr 30, 2025

பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட முக்கிய நிர்வாக அலுவலகங்கள் இயங்கி வருகின்றன, அதில், போலீஸ் எஸ்.பி ஆபீசும் உள்ளது. போலீஸ் எஸ்.பி ஆபீஸ் பின்புறம் 10 அடியில் வேளாண் அலுவலகம் இயங்கி வருகிறது.

இன்று காலை சுமார் 11 மணி அளவில் அங்கு மண் பரிசோதனை பிரிவில் வேலை பார்க்கும் பாரதி என்பவர் அலுவலகம் சென்று வந்து திரும்பி வந்து பார்த்த போது, அவர் நிறுத்திவிட்டு போயிருந்த பைக் காணமல் போயிருப்பது தெரிய வந்தது.

அங்கிருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளை பார்த்த போது, திருடன் ஒருவன் பைக்கின் பூட்டை உடைத்து எடுத்து செல்வது தெரியவந்தது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளுடன் பைக் இழந்த பராதி பெரம்பலூர் போலீசில் புகார் அளித்ததன் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருடனை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில், போலீஸ் எஸ்.பி ஆபீசிலேயே திருடு போன சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.