• Sat. Oct 18th, 2025
WhatsAppImage2025-10-16at2302586
WhatsAppImage2025-10-16at2302578
WhatsAppImage2025-10-16at2302585
WhatsAppImage2025-10-16at2302576
WhatsAppImage2025-10-16at2302584
WhatsAppImage2025-10-16at2302582
WhatsAppImage2025-10-16at2302575
WhatsAppImage2025-10-16at2302574
WhatsAppImage2025-10-16at230258
WhatsAppImage2025-10-16at2302571
WhatsAppImage2025-10-16at2302577
WhatsAppImage2025-10-16at2302572
WhatsAppImage2025-10-16at2302581
WhatsAppImage2025-10-16at2302573
WhatsAppImage2025-10-16at2302583
previous arrow
next arrow
Read Now

பிக் பாஸ் அல்டிமேட்டின் 14 போட்டியாளர்கள்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 5ம் பகுதி முடிந்து சில நாட்களே ஆனா நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ரசிகர்களை 24 மணி நேரமும் குதூகலிக்க செய்ய வந்துள்ளது!

ஒரு மணி நேர ஷோவுக்காக தினமும் கொஞ்ச நேரம் ஷூட்டிங் நடத்திட்டு மத்த நேரம் ரெஸ்ட் கொடுத்து விடுவார்கள், முழுக்க முழுக்க ஸ்க்ரிப்டட் ஷோ உள்ளிட்ட அத்தனை விமர்சனங்களையும் தகர்த்தெறியும் வகையில், 24 மணி நேர நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முயற்சியில் பிக் பாஸ் குழு முடிவு செய்துள்ளது! கமல்ஹாசன் தொகுத்து வழங்க டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் 70 நாட்கள் இந்த ஷோ ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது! பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின், 14 போட்டியாளர்கள் விபரம் இதோ!

வனிதா விஜயகுமார்

பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு, கலக்கியவர் வனிதா விஜயகுமார்! பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் போட்டியாளராக நுழைந்தார். இதற்கு முன் செய்த சிறிய தவறுகளை சரி செய்து விட்டு இந்த முறை வெற்றியை நோக்கி பயணிப்பேன் என சொன்னார். அவருக்கு கமல், தேன் பாட்டிலை பரிசாக கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார்!

நிரூப்
ஜனவரி 16ம் தேதி வரை பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த நிரூப் தற்போது, எப்படியாவது டைட்டிலை தட்டித் தூக்க வேண்டும் என்கிற முயற்சியோடு இரண்டாவது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்! அவருக்கு கமல் மிளகு கொடுத்து அனுப்பினார்.

ஜூலி
பிக் பாஸ் முதல் சீசன் போட்டியாளரான “குறும்படம்” புகழ் ஜூலி பிக் பாஸ் அல்டிமேட்டில் 3வது போட்டியாளராக கலந்து கொள்ள ரிக்‌ஷாவில் வந்து இறங்கினார். கமலிடம், ஜுலி வெங்காயத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அபிராமி
பிக் பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற அபிராமி, 4வது போட்டியாளராக கலந்து கொண்டார். அபிராமிக்கு மங்களகரமாக மஞ்சள் கொடுத்து உள்ளே அனுப்பி வைத்தார் கமல்ஹாசன். ஒவ்வொரு பொருளுக்கும் உள் அர்த்தம் வேறு இருக்கிறதாம். காயின் டாஸ்க் போல மசாலாவை வைத்து டாஸ்க் நடக்கும் எனவும் கூறப்படுகிறது!

தாமரை
பிக் பாஸ் சீசன் 5ல் பங்கேற்றவர், தாமரை! பிக் பாஸ் வீட்டில் இருக்க ரொம்பவே பிடித்திருக்கிறது என சொன்ன நிலையில், மறுபடியும் ஒரு 70 நாட்கள் இருக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது! தாமரைக்கு அரிசி வழங்கப்பட்டது.

தாடி பாலாஜி
பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்ற தாடி பாலாஜி, 6வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார். பிரிந்த மனைவியுடன் சென்ற முறை பிக் பாஸ் வீட்டிற்கு வந்த தாடி பாலாஜி இந்த முறை குடும்ப சுமை இன்றி வந்துள்ளதாக தெரிவித்தார். அவர் சைஸுக்கு முருங்கைக் காயை கொடுத்து உள்ளே அனுப்பினார் கமல்.

பாலாஜி முருகதாஸ்
இந்த சீசனில் தாடி பாலாஜியை தொடர்ந்து, 7வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார், பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் சீசன் 4ல் ஆரி இருந்த நிலையில், டைட்டில் இவருக்கு கிடைக்காமல் ரன்னர் அப் ஆனார். இந்த முறை டைட்டிலை வென்றே தீருவேன் என்கிற வெறியுடன் வந்துள்ளார். பாலாஜிக்கு கீரை வழங்கப்பட்டது.

அனிதா சம்பத்
பாலாஜி முருகதாஸ் உடனே நடனமாடிய படி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்தார் அனிதா சம்பத். ஸ்பேஸ் இல்லை என்கிற பிரச்சனை இனி உங்களுக்கு இருக்காது. 24 மணி நேரமும் ஸ்பேஸ் இருக்கு நீங்க என்ன பண்ணப் போறீங்க என பார்க்க மக்கள் காத்திருக்கின்றனர் என்றார் கமல்! பால் உடன் வீட்டிற்குள் நுழைந்தார் அனிதா சம்பத்.

சுஜா வருணி
பிக் பாஸ் முதல் சீசனில் வைல்டு கார்டாக வீட்டிற்குள் ஆகாய மார்கமாக நுழைந்த சுஜா வருணி இப்போ அம்மா சுஜா வருணியாக அடக்கமாக ஆட்டம் பாட்டம் இல்லாமல் என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த சுஜா வருணியின் ஆட்டம் எப்படி இருக்கும் என்று பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். சுஜா வருணிக்கு பூண்டு வழங்கப்பட்டது.

சுரேஷ் தாத்தா
காரில் இருந்து இறங்கியதும் கையில் சுடச் சுட சிறுதானிய உப்மாவை எடுத்துக் கொண்டு கமல் சாருக்கு வழங்கியபடியே அறிமுகமானார் சுரேஷ் சக்கரவர்த்தி. அவருக்கும் தாமரைக்கும் தான் முட்டிக்கப் போகுது என்றும் சுரேஷ் சக்கரவர்த்தி, தாமரை மற்றும் வனிதா இடையே கடும் போட்டி இருக்கும் எனக் கூறப்படுகிறது. உப்பு டப்பாவுடன் 10வது போட்டியாளராக உள்ளே நுழைந்தார்.

ஷாரிக்
ஷாரிக் 11வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டார். அனிதா சம்பத் மற்றும் ஷாரிக் உள்ளேயும் ஜோடி போட்டு ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அபிநய்
பிக் பாஸ் தமிழ் சிசன் 4ல் கலந்து கொண்ட நடிகர் ஜெமினி கணேசனின் பேரன் அபிநய் வாடி, பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் பங்கேற்றுள்ளார். பாவனி இல்லை என்றாலும் அபிநய்க்கு பிடிக்காத நிரூப் மற்றும் தாமரை உள்ளே இருப்பது குறிப்பிடத்தக்கது. அபிநய்க்கு நெய் கொடுத்து அனுப்பினார் கமல்.

சுருதி
மீண்டும் தாமரையுடன் மோதல் ஏற்படுமா என ரசிகர்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு 13வது போட்டியாளராக பிக் பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ளார் சுருதி. இளைஞர்களின் இதயங்களை கவரும் போட்டியாளராக இவர் மட்டுமே இந்த சீசனில் இருக்கிறார் என்று ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.

சினேகன்
பிக் பாஸ் முதல் சீசனில் ரன்னர் அப் ஆன கவிஞர் சினேகன் பிக் பாஸ் அல்டிமேட்டில் 14வது போட்டியாளராக பங்கேற்றுள்ளார். இரண்டு புத்தகங்களை கமல் சாருக்கு பரிசளித்த சினேகனுக்கு வாழைக்காய் பரிசளித்தார் கமல்.