• Fri. Nov 14th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

‘பிக்பாஸ்’ ராஜூக்கு அடிச்ச லக்கு…

Byகாயத்ரி

Feb 10, 2022

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்று டைட்டில் வின்னரான ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று ”பிக்பாஸ்”. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் சமீபத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த சீசனில் போட்டியாளரான ராஜு டைட்டில் வின்னர் ஆனார். இதனையடுத்து, பிக்பாஸ் டைட்டில் வின்னர் ராஜு புதிய படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக தகவல் பரவியுள்ளது. அதன்படி, ரஜினிமுருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் இவர் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.