விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள மேலூர் துரைச்சாமிபுரம் .தெற்கு தேவதானம் .புத்தூர் . தெற்கு வெங்காநல்லூர் ஆகிய பஞ்சாயத்துகளில் வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் பண்ணை வழி வர்த்தகத்தை அதிகரித்திட மாநிலத் திட்ட நிதியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண் விளைபொருட்களில் அறுவடைக்குப் பிந்தைய இழப்பை குறைப்பதற்கும் தரத்தை பாதுகாப்பதற்கும் தற்காலிகமாக சேமிப்பதற்கும் பண்ணை வழி வர்த்தகத்தை ஊக்குவித்திடவும் விவசாயிகளின் விளைப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைத்திடவ வகை செய்யும் விதமாக உலர் களத்துடன் கூடிய தரம் பிரிப்பு மையம் அமைப்பதற்கு பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் S தங்கப்பாண்டியன் வேளாண்மை துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) விருதுநகர்.. திருமதி மா. செல்வி மற்றும் அ. முருகானந்தம் உதவி பொறியாளர் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை வாரியம் விருதுநகர் வீ.வெங்கடாசலம் உதவி வேளாண்மை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்.











; ?>)
; ?>)
; ?>)