• Sat. Nov 22nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்ட பூமி பூஜை .., எம்.எல்.ஏ வெங்கடேசன் பங்கேற்பு..!

ByKalamegam Viswanathan

Nov 20, 2023

மதுரை மாவட்டம் பாலமேடு அருகே மாணிக்கம்பட்டி முதல் உசிலம்பட்டி வரை சுமார் 3 கிலோ மீட்டர் தொலைவில் ரூ.2 கோடியே 25 லட்சத்து 13 ஆயிரம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கவும், மற்றும் முடுவார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1 கோடியே 64 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு தளங்கள் கொண்ட கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டவும் பூமி பூஜை நடைபெற்றது. இதில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் கலந்து கொண்டு தலைமை தாங்கி அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் ஒன்றிய குழு தலைவர் பஞ்சு, துணைத் தலைவர் சங்கீதா மணிமாறன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதி பாண்டியராஜன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெயமணி, ஜெயமாலா பாலமுருகன், வடக்கு மாவட்ட அவைத்தலைவர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், மாநில பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் ஆதிசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், ஒன்றிய பொருளாளர் சுந்தர், விளையாட்டு மேம்பாட்டு அணி பிரதாப், அணி அமைப்பாளர்கள் சந்தன கருப்பு, யோகேஷ், தவ சதீஷ், ராகுல், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.