மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 5 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்த அகில இந்திய பார்வட் ப்ளாக் கட்சி தலைவர் பி.கே.மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

அதன்படி உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் 6 கோடியே 36 லட்சம் மதிப்பீட்டில் சிலையுடன் கூடிய மணிமண்டபம், திருமண மண்டபம் உள்ளிட்ட கட்டமைப்புகளை அமைக்க இன்று அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் பிரவீன்குமார் பூமி பூஜை செய்து பணிகளை செய்து வைத்தனர்.
இந்நிகழ்வில் உசிலம்பட்டி உதவி ஆட்சியர் உட்கர்ஷ் குமார், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்கதமிழ்ச்செல்வன், சட்டமன்ற உறுப்பினர்கள் அய்யப்பன், பூமிநாதன் மற்றும் திமுக மதுரை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் பி.மூர்த்தி, முக்குலத்தோர் சமுதாய மக்கள் மட்டுமல்லாது, அனைத்து ஏழை எளிய மக்களின் கல்வி வளர்ச்சிக்காக கலைஞர் ஆட்சி காலத்தில் தனது முயற்சியால் மூன்று கல்லூரிகளை உருவாக காரணமாக இருந்தவர் பி.கே.மூக்கையாத்தேவர்.
அப்படிப்பட்ட மூக்கையாத்தேவருக்கு மணிமண்டபம் அமைக்க நிதி ஒதுக்கி நிதி தந்து இன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இந்த பணி வேகமாக கட்டி முடிக்கப்படும் என பேட்டியளித்தார்.
                               
                  












              ; ?>)
; ?>)
; ?>)