திருநள்ளாரில் நவராத்திரியை ஒட்டி உலக பிரசித்தி பெற்ற ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில் சரஸ்வதி பூஜையை முன்னிட்டு ஓலைச்சுவடிக்கு பாவனா அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

காரைக்காலை அடுத்துள்ள உலக புகழ்பெற்ற திருநள்ளாறு ஸ்ரீதர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீசனிபகவான் ஆலயத்தில் நவராத்திரியை ஓட்டி இன்று சரஸ்வதி பூஜை நடைபெற்றது. இதில் ஓலைச்சுவடி மற்றும் புத்தகங்களுக்கு பாவனா அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக விக்னேஸ்வர பூஜையும் அதனை தொடர்ந்து திரவியப் பொடிகள், பால், சந்தனம் கொண்டு பாவனா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனையும் நடைபெற்றது. இதில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை வழிபட்டனர்.