பாரதிய ஜனதா கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்டத்தில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல தலைவர்களுக்கான ஆலோசனை கூட்டம், பூத் கமிட்டியை வலிமைப் படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் இராஜபாளையம் நகரம் தெற்கு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியானது விருதுநகர் மேற்கு மாவட்டத் தலைவர் சரவணதுரை_ராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழக பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ_விநாயகன் சிறப்புரையாற்றி வழிகாட்டினார்கள்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் OBC அணி மாநில துணைத்தலைவருமான கோபால்சாமி EX – MLA கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். v.மாரிச்செல்வம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய அமைப்பாளர் நன்றி கூறினார்.
