• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

எலியார்பத்தியில் வளர்ச்சி அடைந்த பாரதம் கலந்துரையாடல் நிகழ்ச்சி..!

ByKalamegam Viswanathan

Jan 9, 2024

திருப்பரங்குன்றம் அருகே எலியார்பத்தியில் தேசிய வேளாண் அறிவியல் மையம் சார்பில், கிராமப்புற மக்களுக்கான மத்திய அரசின் வேளாண்மை திட்டங்கள் குறித்து “வளர்ச்சி அடைந்த பாரதம்” கலந்துரையாடல் நிகழ்ச்சி உறுதி மொழியுடன் நடைபெற்றது.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, எலியார்பத்தி கிராமத்தில் தேசிய வேளாண் அறிவியல் மையம் சார்பில் வளர்ச்சி அடைந்த பாரதம் எனும் திட்டத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு நவீன வேளாண் அறிவியல் தொழில்நுட்பத்துறை கூடிய விவசாய கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. எலியார்பத்தி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் மற்றும் தேசிய வேளாண் அறிவியல் மைய பேராசிரியர் நிர்மலா ஆகியோர் கலந்து கொண்டு வளர்ச்சியடைந்த பாரதம் எனும் தலைப்பில் கிராமப்புற பொது மக்களுக்கு நவீன வேளாண் அறிவியல் குறித்து விளக்கிக் கூறினர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வேளாண் விலைப் பருக்களுக்கு நவீன இந்திரங்கள் மூலம் விவசாயத்தை பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

மேலும் இந்தியாவின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்போம் எனக் கூறி பேராசிரியர் நிர்மலா தலைமையில் கிராமப்புற மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.


2044 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவை வளர்ச்சி அடைந்த நாடாகவும் சுய சார்பு அடைந்த நாடாகவும் மாற்ற உறுதியளிக்கின்றேன். காலனித்துவத்தின் எந்த தடையும் இன்றி மாற்ற உறுதி அளிக்கின்றேன் ஒற்றுமையை வலுப்படுத்தவும் நாட்டை பாதுகாப்பவர்களை மதிப்பு செய்வதற்கு உறுதி அளிக்கின்றேன். ஓரு குடிமகனின் கடமைகளை நிறைவேற்றுவதற்கும் உறுதியளிக்கின்றேன் என மக்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து நவீன விவசாயத்தின் அடிப்படையில் ட்ரோன் மூலம் விவசாய பயிர்களுக்கு மருந்து அடிப்பது கொடுத்து குறித்து சோதனை முயற்சியாக மூலம் மருந்து தெளிப்பது பற்றி விளக்கம் அளிக்கப்பட்டது.
மானிய விலையில் ட்ரோன் கருவி பெறவும் அல்லது வாடகை மூலமாகவும் பெற்று விவசாயத்தின் நவீன யுக்திகளை பயன்படுத்தி பூச்சி மருந்து தெளிக்க மிகவும் உதவும் என்றும் இதனால் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை, குறைந்தபட்ச பண செலவு குறையும் என்றும் தேசிய வேளாண்மை அறிவியல் மைய பேராசிரியர் நிர்மலா கூறினார்.