• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் பைரவ அஷ்டமி விழா..,

ByKalamegam Viswanathan

Nov 13, 2025

மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள அவனியாபுரத்தில் பாண்டிய மன்னர் காலத்திய ஆறாம் நூற்றாண்டை சேர்ந்த பாலம் மீனாம்பிகை கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இக்கோவிலில் பைரவர் பிறந்த தினமான வைக்கத் அஷ்டமி விழா சிறப்பாக நடைபெற்றது.

முன்னதாக அறக்கட்டளைதாரர் பெரியகுளம் காசுக்கார செட்டியார் வளர சார்பில் கணபதி ஹோமம் பூஜை சாந்தி பூஜை ஹோமத்துடன் ,கோ பூஜை நடைபெற்றது.

பின்னர் யாக சாலையில் வைக்கப்பட்டுள்ள கும்ப கலசங்கள் பைரவர் சன்னதிக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பைரவருக்கு பால், தயிர் , இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட 18 வகை வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டது.

அதைத் தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சத்ரு சம்ஹார மூர்த்தி பைரவருக்கு தூபதீபம் காட்டப்பட்டது.

ஆண்டிற்கு ஒருமுறை வரும் பைரவாஷ்டமி விழா என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.