• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Aug 9, 2022

ஆர்கானிக் ஷாம்பு:

தேவையான அளவு: பூந்திக் கொட்டை - 10, சிகைக்காய் - 1 கப், நெல்லிமுள்ளி - 1 கப், வெந்தயம் - 1 கப், செம்பருத்தி பூக்கள் - 3

செய்முறை:
முதலில் பூந்திக் கொட்டைகளை சிறிய உரலில் அல்லது கல்லில் தட்டி அதன் கொட்டைகளை நீக்கி விடுங்கள். அதன்பின்னர் ஒரு பவுலில் இந்த கொட்டை நீக்கிய பூந்திக் காய்களை போடுங்கள். அதனோடு 1 ஸ்பூன் அளவிற்கு வெந்தயத்தை சேருங்கள். கூடவே நெல்லி முள்ளியை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்து சேருங்கள். அதனுடன் சிகைக்காய்கள் 6 எடுத்து சேர்த்திடுங்கள். இவைகளை ஒரு கப் அளவிற்கு நீர் ஊற்றி ஒரு இரவு முழுக்க ஊற விடுங்கள். அதன்பின்னர் மறுநாள் காலையில் தண்ணீர் பிரவுன் நிறமாக மாறியிருக்கும்.

ஒரு பாத்திரத்தில் இவைகளை மாற்றுங்கள். அதனை அடுப்பில் வையுங்கள். இவைகளோடு மூன்று செம்பருத்தி பூக்களை இதழ்களாக அதனுடன் சேருங்கள். அடுப்பை பற்ற வைத்து இந்தக் கலவையில் உள்ள நீர் கால் பாகமாக சுண்டும் வரை காய்ச்சுங்கள். ஆறியபின் காய்ச்சிய நீரை வடிகட்டி ஒரு பாட்டிலில் பத்திரப்படுத்துங்கள். மேலும் இதனை நீங்கள் பிரிட்ஜில் வைத்து 1 மாதம் வரை பயன்படுத்தலாம்.