- ஹென்னா கத்தா பவுடர் முட்டையின் வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு தயிர் டீ டிகாஷன் இவற்றை நன்கு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும் அதனை ஒருநாள் இரவு முழுவதும் காற்று புகாத வண்ணம் நன்கு அடைத்து வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் எடுத்து தலைக்கு அப்ளை செய்து மூன்று மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் இயற்கையான கலர் நம் கூந்தலுக்கு கூந்தல் அழகாகும் கூந்தல் உதிர்வது தடுக்கும் நரை முடியை தடுக்கும்
2 முருங்கைக் கீரையை நன்கு அரைத்து நம் தலையில் பேக் போன்று அப்ளை செய்து 30 நிமிடமும் இல்லை 60 நிமிடமோ கழித்து தலையை நன்கு அலசினால் தலை முடி வலுபெறும்
3.அதே போன்று அகத்திக் கீரையை நன்கு அரைத்து எலுமிச்சை சாறு அதனுடன் எட்டு தயிர் சிறிது கலந்து நன்கு கலக்கி தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கூந்தல் கருப்பாகும் - முட்டையின் வெள்ளைக்கரு தயிர் வாழைப்பழம் இவற்றை நன்கு அடித்து மாவு போன்ற பதத்தில் எடுத்து கூந்தலில் தடவ வேண்டும் பின்பு அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் கூந்தல் பட்டு போல இருக்கும்
- தேங்காய் சிரட்டையை நன்கு கருகி பொடி செய்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு பதத்திற்கு காய்ச்சி அதனை தடவி வந்தால் நரை முடி மறையும் நரை முடி வருவதை தடுக்கும்
- கருந்துளசி மிளகு சிறிது பூண்டு இவற்றை நன்கு அரைத்து நம் தலையில் தேய்த்து வர பேன் தொல்லை இருக்காது
- சாதம் வடித்த கஞ்சியை முதல் நாள் ஊற விட்டு மறுநாள் அந்த கஞ்சியை எடுத்து நாம் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அழுந்தினால் நம் தலையின் முடி மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
- ஷாம்புடன் பயிர் கலந்து தலையில் தடவி தலைமுடியை நன்கு அலசிய பின் அரிசி கழுவிய நீரை நாம் சிறிது நேரம் தலையில் சுற்றி ஊற விட வேண்டும் ஊரவிட்ட பின் சிறிது நேரம் கழித்து நாம் நன்கு தலையை அலசவும் அலசியப்பின் நம் தலையை ஒரு அளவுக்கு காய வைத்த பின் ஒரு பாட்டிலில் அரிசி கழுவிய நீரை விட்டு மெது மெதுவாக ஸ்ப்ரே செய்ய வேண்டும் வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறையும்

