

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் விஜய் பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் ‘பீஸ்ட்’ படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் 6 ஆம் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நிறைவடைந்தது. 75 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் மீதமுள்ள 25 சதவீத படப்பிடிப்பை இரண்டுக் கட்டங்களாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. டிசம்பரில் முழு படப்பிடிப்பு நிறைவடைகிறது.
இந்த நிலையில், நெல்சன் திலீப்குமார் படத்தைப் பற்றி கூறும்போது, பீஸ்ட் படம் கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டு வேற மாரி இருக்கும். விஜய் சார் வைத்து பண்ணும்போது அவருக்கும் புதிதாக இருக்கவேண்டும். எனக்கும் புது முயற்சியாக இருக்கவேண்டும். இதையெல்லாம் மனதில் வைத்துதான் படத்தை இயக்கியிருக்கிறேன். கண்டிப்பாக புதிதாக இருக்கும்” என்று உற்சாகமுடன் தெரிவித்திருக்கிறார்.