பீஸ்ட் படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், டாம் சாக்கோ ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஏப்ரல் 13ம் தேதி ஐந்து மொழிகளில் உலகெங்கும் ரிலீசாக இருக்கும் இந்தப் படத்தை தமிழில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது. இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை மாலை வெளியாகும் என்று கலக்கலான போஸ்டருடன் படக்குழு அறிவித்துள்ளது! இணையத்தில் அந்த போஸ்டரை விஜய் ரசிகர்கள் தெறிக்கவிட்டு விடுகின்றனர்!