• Tue. Jan 20th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பீஸ்ட் படத்திற்கு குவைத்தில் தடை!

பீஸ்ட் டிரைலர் ரிலீசை தொடர்ந்து ப்ரொமோஷன் பணிகளுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ப்ரொமோஷனுக்காக 10 ஆண்டுகளுக்கு பிறகு விஜய்,சின்னத்திரையில் பேட்டி அளிக்க உள்ளார். இந்த பேட்டி ஏப்ரல் 10 ம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

இந்நிலையில், குவைத் அரசு பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அல்லது வன்முறையயை சித்தரிக்கும் விதமாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது தான் தடைக்கு காரணம் என சொல்லப்படுகிறதாம்.

இதற்கு முன்பாக, விஷ்ணு விஷால் நடித்த எஃப்ஐஆர், ,கிரூப் ஆகிய இந்திய படங்களுக்கும் குவைத்தில் தடை விதிக்கப்பட்டது. வன்முறையை தூண்டும் வகையிலான காட்சிகள் அடங்கிய படங்களை திரையிடக் கூடாது என்ற விதியை சமீப காலமாக குவைத் சென்சார் மிக தீவிரமாக பின்பற்றி வருவதாக கூறப்படுகிறது. குவைத் அரசு பீஸ்ட் படத்திற்கு தடை விதித்ததற்கு சொல்லி உள்ள காரணத்தால் மற்ற நாடுகளிலும் இது போன்ற தடை வருமா என்றும், இது படத்தின் வசூலை பாதிக்குமோ என அச்சம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் அரபு நாடுகளில் வெறம் 5 சதவீதம் மட்டும் வசூல் கிடைப்பதால், இது பீஸ்ட் படத்தின் வசூல் பெரிய அளவில் பாதிக்கப்படாது என கூறப்படுகிறது.