• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

செய்யது முஹம்மது கலிபாவிற்கு பசீர் பாராட்டு..,

ByR. Vijay

May 24, 2025

நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பாரம்பரிய முறைப்படி பொறுப்பேற்ற செய்யதுமுஹம்மதுகலிபாவிற்கு திரைப்பட நடிகர் பசீர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
புகழ் பெற்ற நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ளது.

இந்த தர்காவிற்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள் தினந்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு புகழ் பெற்ற நாகூர் தர்கா 470 ஆண்டு பாரம்பரிய பழக்கவழக்கத்தின் படி நாகூர் தர்காவை ஸ்கிம் படி பரம்பரை அறங்காவலர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 19ம் தேதி நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி செய்யதுகாமில் சாஹிப் இயற்கை எய்தினார். அவரது மறைவையட்டி தர்கா பழக்க வழக்கங்கள் படி 3ம் நாள் அடுத்த வாரிசு பொறுப்பேற்க வேண்டும்.

அதன் படி அவரது இறப்பை முன்னிட்டு மூத்த மகன் செய்யதுமுஹம்மதுகலிபா நேற்று முன்தினம் (22ம் தேதி) நாகூர் தர்கா அலுவலகத்தில் நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி ஆக பொறுப்பேற்றார். இவர் நாகூர் ஆண்டவரின் 11ம் தலைமுறை ஆதீனமாவர். பாரம்பரிய முறைப்படி செய்யதுமுஹம்மதுகலிபாவிற்கு நாகூர் ஆண்டவரின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டு குண்டுகள் முழங்க, நாகூர் ஆண்டவரின் சன்னதி திறக்கப்பட்டு பாத்திஹா நிகழ்ச்சி நடந்தது. இவ்வாறு நாகூர் ஆண்டவர் தர்கா பரம்பரை டிரஸ்டியாக பாரம்பரிய முறைப்படி பொறுப்பேற்ற செய்யதுமுஹம்மதுகலிபாவிற்கு திரைப்பட நடிகர் பசீர் பாராட்டுக்களை தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: நாகூர் தர்கா என்றவுடன் எங்களுக்கு நினைவிற்கு வருவது நாகூர் தர்கா பரம்பரை டிரஸ்டி செய்யதுகாமில். இவரது காலத்தில் நாகூர் தர்கா நிர்வாகம் சிறப்பாக இருந்தது. இவர் இயற்கை எய்தியவுடன் அவரது மூத்த மகன் செய்யதுமுஹம்மதுகலிபா பரம்பரை டிரஸ்டியாக பொறுப்பேற்றுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது என்றார்.