நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது.
நத்தம் அருகே உலுப்பகுடியில் வேட்டைக்காரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பல நூறு ஆண்டுகளாக ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா பாரம்பரியமாக நடந்தது. நேர்த்திக் கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டு சமைக்கப்பட்டன. 150 மூடை அரிசியில் சாதம் தயாரானது. இந்த கறி விருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.