• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பந்தாணி கண்மாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.,

ByP.Thangapandi

Jun 8, 2025

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி கிராமத்தில் உள்ளது பந்தாணி கண்மாய். இக்கண்மாய் சுமார் 30ஏக்கர் பரப்பளவு கொண்டுள்ளது. இக்கண்மாயை தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் சுத்தம் செய்ய முடிவெடுக்கப்பட்டு புலவர் சின்னன் அய்யா, வருமானவரித்துறை முதன்மை ஆனையர் அருன்சிபரத், ஊராட்சி ஒன்றிய பொறியாளர் வினோத் குமார் ஆகியோர்கள் வழிகாட்டுதல்படி

உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் முறையான தடையில்லா சான்று பெற்று உசிலை நகர அரிமா சங்க தலைவர் பிரேம்குமார், உசிலம்பட்டி வளர்ச்சி மைய உறுப்பினர்கள், பசுக்காரன்பட்டி கிராம மக்கள்
தலைமையில், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநிலத் துணை பொதுச் செயலாளர் நேதாஜி மற்றும் 58 கால்வாய் விவசாயிகள் முன்னிலையில்

தன்னார்வ தொண்டு நிறுவனங்களான வனத்துக்குள் திருப்பூர் வெற்றி, கிளாசிக் போலோ உரிமையாளர் சிவராமன், சிஇடி ட்ரஸ்ட் நிறுவனர் ஜெயராமன், மதுரை ரோட்டரி சங்கம் ஆகியோரின் பங்களிப்புடன் பொக்லின் இயந்திரம் மூலம் கண்மாய் சீரமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. வருகிற சில நாட்களில் இந்த கண்மாய் முழுவதும் சீரமைக்கப்பட்டு கண்மாய் கரை உயர்த்தி அகலப்படுத்தி உட்புறம் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற முடிவெடுக்கப்பட்டு பணிகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

படவிளக்கம்:
உசிலம்பட்டி அருகே தன்னர்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக பசுக்காரன்பட்டி பந்தாணி கண்மாய் சீரமைப்பு பணிகள் தொடக்கம்.