• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கு தடை

Byகாயத்ரி

Jan 19, 2022

கொரோனா பரவலை தொடர்ந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மார்ச் 23-ந் தேதி முதல் உள்நாட்டு, சர்வதேச பயணிகள் விமான சேவைகள் தடை செய்யப்பட்டன. அதன்பின்கொரோனா தாக்கம் சற்று தணிந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உள்நாட்டு விமான சேவை தொடங்கியது.

ஆனால், வழக்கமான சர்வதேச விமான சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. சூழ்நிலைகளுக்கு ஏற்ப விமான சேவை தடை நீட்டிக்கப்படுகிறது.அந்த வகையில், தற்போது இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால் சர்வதேச பயணிகள் விமானங்களுக்கான தடை பிப்ரவரி 28-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.சர்வதேச சரக்கு விமானங்கள் மற்றும் அரசால் அனுமதிக்கப்பட்ட விமானங்களுக்கு மட்டும் தடை இல்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.