• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஏப்.19 முதல் ஜூன் 1 வரை தேர்தல் கருத்துக்கணிப்புக்குத் தடை

Byவிஷா

Mar 30, 2024

மக்களவைத் தேர்தல் நடைபெறும் நாளான ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை தேர்தல் கருத்துக் கணிப்புக்குத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவின் 18 வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடக்கிறது. மேலும் ஆந்திரா, ஒடிசா, அருணாசல பிரதேசம் மற்றும் சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டசபை தேர்தலும் இந்த தேர்தலுடன் நடக்கிறது. இதைப்போல 12 மாநிலங்களில் காலியாக உள்ள 25 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடக்கிறது.
இந்த நாட்களில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தவோ, வெளியிடவோ தடை விதித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டு உள்ளது. குறிப்பாக முதல்கட்ட தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 19-ந் ஏப்ரல் 19 காலை 7 மணி முதல் ஜூன் 1 மாலை 6.30 மணி வரை தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்த, முடிவுகளை வெளியிட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதித்துள்ளது தேர்தல் ஆணையம். தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுவதால், ஒரு பகுதியில் வெளியாகும் கருத்துக்கணிப்பு, தேர்தல் நடக்கும் மற்ற பகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

இதைப்போல வாக்குப்பதிவுக்கு முந்தைய 48 மணி நேரத்தில் கருத்துக்கணிப்பு முடிவுகள், தேர்தல் ஆய்வுகள் தொடர்பான எந்த தகவல்களையும் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.