• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம்..,

ByA.Tamilselvan

Aug 28, 2022

இந்திய கால்பந்து சம்மேளத்திற்கான தடை நீக்கப்பட்டதால் கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தில்லி இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கான தடை நீக்கம் தேர்தல் மற்றும் மூன்றாம் நபர் தலையீடு காரணமாக இந்திய கால்பந்து சம்மேளனத்திற்கு சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) இடைக்கால தடை விதித்து, இளையோர் மகளிர் உலகக்கோப்பை நடத்துவதற்கான உரிமத்தையும் ரத்து செய்து அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இந்திய கால்பந்து வரலாற்றில் ஏற்பட்ட முதல் தடை நடவடிக்கை என்பதால் விளையாட்டு உலகில் இந்தியாவிற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்த பிரச்சனையை தீர்த்து வைக்க உச்சநீதிமன்றத்தை அணு கியது ஒன்றிய அரசு. உச்சநீதிமன்றம் 3 பேர் கொண்ட குழுவை நீக்கி, தேர்தல் நடத்த உத்தரவிட்டு இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே நிர்வா கத்தை ஒப்படைத்தது. மேலும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் அறிவித்தார். இந்திய கால்பந்து கூட்ட மைப்பிடமே நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் விதித்த தடையை வாபஸ் வாங்கியது பிபா. இளையோர் மகளிர் கால்பந்து உலகக் கோப்பை போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளதால் இந்திய கால்பந்து ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.