• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி வழங்கிய பாலா..!

Byவிஷா

Dec 7, 2023

தன்னுடைய சொற்ப வருமானத்தில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள 200 குடும்பங்களுக்கு தன்னார்வலரும், நகைச்சுவை நடிகருமான பாலா பண உதவி வழங்கியுள்ளார்.
மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட கன மழையால் சென்னை தலைநகரமே வெள்ளத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. மூன்று நாட்களைக் கடந்தும் இதற்கு விடிவு பிறந்த பாடில்லை. பலரும் சமூக வலைதளங்களில் உதவி கேட்டு வரும் நிலையில் தகவல் அறிந்து மீட்பு படையினர் அவர்களை பத்திரமாக மீட்டு வருகின்றனர்.
மேலும் திமுக நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் பலர் பாதிக்கப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி உதவி செய்து வருகின்றனர். பிரபல நடிகர்களான சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யும் வகையில் 10 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண், பார்த்திபன் உள்ளிட்டவர்களும் தங்களால் முடிந்த அளவில் பண உதவி செய்தும் உணவுப் பொருட்களை வழங்கியும் வருகின்றனர்.
இந்நிலையில் பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நகைச்சுவை நடிகரும், தன்னார்வலருமான நடிகர் KPY பாலா பண உதவி செய்து வருகிறார். அதன்படி பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணம் கொடுத்து உதவியுள்ளார்.

நடிகர் பாலா ஏற்கனவே ஆதரவற்றவர்கள், குழந்தைகள் என பலருக்கும் உதவி செய்து வருபவர். சில தினங்களுக்கு முன்பாக கூட ஈரோடு சத்தியமங்கலம் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களுக்கும், அறந்தாங்கி பகுதி மக்களுக்கும் இலவசமாக ஆம்புலன்ஸ் வழங்கி பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.