சிவகாசியில் மாநில அளவிலான இறகு பந்தாட்ட போட்டி நடைபெற்று வருகிறது. மாநில தரவரிசை பட்டியலுக்கான இப்போட்டியில் தமிழகத்தின் சென்னை, கோவை, சேலம், மதுரை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1100 வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.

15வயதுக்குட்பட்டோருக்கான ஆடவர் ஒற்றையர், இரட்டையர், மகளிர் ஒற்றையர் மற்றும் இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று துவங்கி நடைபெற்று வரும் இதன் இறுதி போட்டி வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.