• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாபா பிளாக்‌ ஷீப் திரைவிமர்சனம்

Byஜெ.துரை

Jul 13, 2023

ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி,போஸ் வெங்கட்,சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்

இன்றைய சமூகத்தில் சர்வ சாதாரணமாக அதிகரித்து வரும் மாணவ, மாணவியர்களின் தற்கொலை, மன அழுத்தப் பிரச்சினைகள், பெற்றோரின் கண்டிப்பான வளர்ப்பு, இணையத்தில் மூழ்கி கிடக்கும் பிள்ளைகள் ஆகியவை பற்றி பேசியுள்ளது ‘பாபா பிளாக் ஷீப்’ படம்

இப்படம் பள்ளி மாணவ, மாணவிகள் வாழ்வை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களின் மழலைத்தனம் விளையாட்டுத்தனம் சேட்டைகள் அவர்களின் இன்பங்கள், துன்பங்கள் என்று பள்ளி மாணவர்களின் வாழ்வை சொல்லும் அழகான ஒரு படம்.

சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார்.

அவர் மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை 5 பேருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுகிறது.

ஒரு சண்டையில் இரு குழுவும் ஒன்றாக இணைகிறார்கள் அப்போது இவர்கள் கையில் பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் கிடைக்கிறது அந்த கடிதத்தை எழுதியது யார்? .. இந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா? இது தான் படத்தின் கதை.

அபிராமி உணரச்சிகரமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை
கண்கலங்க வைத்துள்ளார்.

ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர ஒரு கதை உள்ளது என்று ஜி.பி.முத்துவை வைத்து சொன்னது சிறப்பு. அம்மு அபிராமி – அப்துல் அயாஸ் இடையேயான காட்சிகள் சிறப்பு.

மொத்தத்தில் பாபா பிளாக்‌ ஷீப் பெற்றோர்களுக்கு ஒரு விழிப்புணர்வு படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.