மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே நெடுங்குளம் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பூர்ணகலாதேவி புஷ்ப கலாதேவி சமேத வெங்கலநாதமுடைய அய்யனார் திருக்கோவில் மூன்றாவது வருடாந்திர அபிஷேக விழா நடைபெற்றது.
திருக்கோவில் அர்ச்சகர் முருகன் புனித தீர்த்தங்களை கொண்டு வந்து சுவாமி அம்பாளுக்கு அபிஷேகம் செய்து தொடர்ந்து பால் தயிர் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானம் நடைபெற்றது.

திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை அறங்காவலர் பிச்சைமணி மற்றும் நெடுங்குளம் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.








