• Fri. Mar 13th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விக்கிரமங்கலம் அருகே அய்யனார் குளம், கடசாரி நல்ல குரும்பன் கோவிலில் பூசாரி பிடித்தல் நிகழ்ச்சி…

ByKalamegam Viswanathan

Jan 1, 2024

மதுரை மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் அய்யனார் குளத்தில் கடசாரி நல்ல குரும்பம் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கானோர் பங்காளிகளாக உள்ள நிலையில் இந்த கோயிலில் வருடம் தோறும் புரட்டாசி மாதம் பொங்கல் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் மேலும் ஒவ்வொரு மாதமும் விழா காலங்களிலும் மற்றும் சுபமுகூர்த்த நாட்களிலும் கோவிலுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் வருகிறது இதனைத் தொடர்ந்து, இந்தக் கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பூசாரி பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக முழுவதிலும் இருந்து கோவிலுக்கு பாத்தியப்பட்ட பங்காளிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் வருகை தந்தனர். அவர்கள் கோவிலின் அருகில் உள்ள அவரவர் இல்லங்களிலும் பொது மந்தையிலும் கூடி பூசாரி பிடித்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்து அன்னதானம் வழங்கினார்கள். இதில் அய்யனார்குளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.