• Thu. Mar 5th, 2026
WhatsAppImage2026-02-27at0552154
previous arrow
next arrow
Read Now

ஆட்சியரங்க பகுதியில் 100% வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி

ByG.Suresh

Mar 19, 2024

2024 நாடாளுமன்றத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 19-ந்தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டது. இந்த தேர்தலில் 100%வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி ஆட்சியரக பகுதியில் நடைபெற்றது. இப்பேரணியை 100% வாக்களிப்பது குறித்து உறுதிமொழி ஏற்று மாவட்டதேர்தல் அலுவலர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த பேரணியில் அரசினர் மகளிர் கலை கல்லூரி மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். சிவகங்கை மாவட்ட ஆட்சியரகப்பகுதிகள் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து சிவகங்கை பேருந்து நிலையத்தில் இந்த விழிப்புணர்வு பேரணி முடிவுற்றது. இந்தப் பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் மற்றும் அரசு அதிகாரிகள், மாணவ, மாணவிகள் என ஏராளமான கலந்து கொண்டனர்,