சைபர் வழி இணையதள குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து பொதுமக்கள் தங்களது வங்கிக் கணக்கில் வைத்துள்ள சேமிப்புகளை இழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது
இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதனை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிநேக பிரியா கொடி அசைத்து துவக்கி வைத்தார்
டிஜிட்டல் முறையில் அரெஸ்ட், வங்கி கடன் தருவதாகவும், பரிசு பொருட்கள் விழுந்துள்ளதாக உள்ளிட்ட பல்வேறு வகையில் இணையதள குற்ற சம்பவங்கள் நடைபெறும் நிலையில் பொதுமக்கள் அதில் கவனமாக இருக்க வேண்டும்
தெரியாத நபர்களிடம் ஓடிபி, பாஸ்வேர்டு, உள்ளிட்ட சுய விவரங்களை வழங்க வேண்டாம் என்றும் தேவையற்ற லிங்கை தொடுவது பணத்தை இழக்கும் அபாயம் ஏற்படும் என்பதை வலியுறுத்தும் விதமாக பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ மாணவி பங்கு பெற்ற இந்த விழிப்புணர்வு பேரணி தேனி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள கொட்டக்குடி பாலத்தில் தொடங்கி பங்களாமேடு வரை நடைபெற்றது.