• Fri. Mar 20th, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

குமரியில் பற்களை பாதுகாக்கும் விழிப்புணர்வு ஊர்வலம்..,

கன்னியாகுமரி மாவட்டம் : மார்ச் 20 உலக வாய் சுகாதார தினத்தை முன்னிட்டு ஆரோக்கியமான பற்களையும் ஈர்களையும் பராமரிப்பது முக்கியத்துவத்தை நினைவூட்டும் வகையில் சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

உலக வாய் சுகாதார தினம் ஆண்டுதோறும் மார்ச் 20 அன்று கொண்டாடப்படுகிறது. வாய் ஆரோக்கியம் மற்றும் வாய்வழி சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பற்கள் மற்றும் ஈறுகளின் நோய்களைத் தடுக்கவும் இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் இந்திய பல் மருத்துவ சங்கம் கன்னியாகுமரி கிளை சார்பாக விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில் ஆரோக்கியமான பற்களையும் ஈர்களையும் பராமரிப்பது முக்கியத்துவத்தை நினைவூட்டுகிறது. மேலும் ஆரோக்கியமான வாய் தனிநபர் வசதியாக உண்ணவும், பேசவும் நம்பிக்கையுடன் புன்னகைக்கவும் எந்தவித தடையும் இன்றி பழக பற்களை பாதுகாக்க வேண்டும் என்பதனைக் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சியானது நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு பேரணியானது கன்னியாகுமரி கடற்கரை சாலை வழியாக விழிப்புணர்வு பேரணி கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் வந்து நிறைவடைந்தது.

இந்த விழிப்புணர்வு பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ மாணவ மாணவிகள் பங்கேற்று பற்களின் பாதுகாப்பு குறித்து பதாகைகள் எந்தியும் துண்டு பிரசாரங்கள் சுற்றுலா பயணிகளிடம் வழங்கியும் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.