நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சியில் தூய்மையை நோக்கி மேலும் ஒரு படியில் தூய்மையே சேவை 2024 என்ற தலைப்பில் விழிப்புணர்வு பேரணி நகர மன்ற தலைவர் சேர்மன் மோ.செல்வராஜ், நகர மன்ற துணைத் தலைவர் ப.பாலமுருகன், நகராட்சி ஆணையாளர் தாமரை ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த பேரணியில் கலைக்குழுவினர்களுடன் நகர மன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி செல்வம், சுதாவனின் அருள்,நகராட்சி அதிகாரிகள், சேரன் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தன்வந்திரி கல்லூரி மாணவ,மாணவிகள், நகர கழக நிர்வாகிகள் திருநாவுக்கரசு,நந்த பிரகாஷ் ரவீந்திரன், வீரமணி, கார்த்திக் ராஜ், சண்முகராஜ், பச்சையப்பன், குமார் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.



